உலகம்

நிறவெறியை தூண்டும் சர்ச்சை விளம்பரம்; மன்னிப்பு கேட்ட 'டவ்' நிறுவனம்

webteam

நிறவெறியை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட‌ விளம்பரத்துக்காக டவ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அத்துடன் அந்த விளம்பரத்தை தனது பேஸ்புக் பக்க‌த்தில் இருந்தும் உடனடியாக நீக்கியது.

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி‌ வரும் டவ் நிறுவனம், அண்மையில் பாடி வாஷ் எ‌ன்ற பெயரில் கறுப்பான‌ பெண்களுக்கா‌ன அழகு சாதன பொருளை அறிமுகம் செய்தது. அந்த பொருளை விளம்பரப்படுத்துவதற்காக கறுப்பின பெண் ஒருவரையும் டவ் நிறுவனம் நடிக்க வைத்தது.‌ அதில் அந்த பெண் தனது ஆடையை கழற்றி முடிப்பதற்குள் வெள்ளையின பெண்ணாக மாறிவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இதுதான் தற்போது நிறவெறியை தூண்டும்‌ விதத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படு‌த்தி இருக்கிறது. இதைத் தொட‌ர்ந்து அந்த விளம்பரத்தை நீக்கியுள்ள டவ் நிறுவனம், அதற்காக ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.