உலகம்

"நன்கொடை பணமே பைடனின் வெற்றிக்கு உதவியது"- முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

webteam

தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாத நபர்கள் வழங்கிய நன்கொடை பணமே பைடனின் வெற்றிக்கு கைக்கொடுத்ததாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பைடனின் பரப்புரைக்கு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் யாரோ சிலரிடமிருந்து நன்கொடையாக கிடைத்துள்ளதாகவும், பைடனை ஆதரித்த நபர்களை அல்லாமல் யாரோ சிலர் அவருக்கு நன்கொடை கொடுத்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையை வென்றெடுக்க ஜோ பைடனுக்கு நிதி கொடுத்து உதவியது யார் என்பது பற்றிய விவரங்கள் பொதுமக்களுக்கு ஒருபோதும் தெரிய வராது என்று ட்ரம்ப் தரப்பில் சொல்லப்படுகிறது.

"இந்த தொகை கடந்த 2012-ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு யாரோ சிலர் கொடுத்த நன்கொடையை விட அதிகமானது. கருப்புப் பணத்தை தடை செய்ய விரும்புவதாக தேர்தலுக்கு முன்னர் பேசிய ஜனநாயகக் கட்சியினர், அத்தகைய பணத்தைக்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வெற்றி பெற்ற பைடனை அமைதியான முறையில் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என ட்ரம்பின் குடியரசுக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.