எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்ப் வரி விகிதங்கள் | டெஸ்லா வாகனங்களுக்கு பிற நாடுகளில் வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக போரில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ட்ரம்ப் மீதான எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை எதிர்க்கும்விதமாக டெஸ்லா வாகனங்களுக்கு பிற நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

PT WEB

தங்கள் நாட்டுக்கு எந்த அளவு வரிவிதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அந்த நாடுகளின் மீது வரி விதிக்கப்படும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஸ்டீல், அலுமினியம் இறக்குமதி வரிகள் ஆஸ்திரேலியாவையும் இறைச்சி, ஒயின் ஏற்றுமதியால் நியூசிலாந்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பரஸ்பர வரி விகிதம் என்ற கொள்கையால், கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய யுனியன் நாடுகள் அமெரிக்காவுக்கு அதே அளவு வரி விதிக்கின்றன.

எலான் மஸ்க்

ட்ரம்பின் வரி முடிவுகள் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தயாரிப்புகள் மீது விழத் தொடங்கியுள்ளன. உலக அளவில் பல நாடுகள் மஸ்கின் டெஸ்லா வாகனங்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் டெஸ்லா வாகன விற்பனை 72%, ஜெர்மனியில் 76% சரிந்துள்ளன. 2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது டெஸ்லா பங்குகள் விலை 50% சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் நீதியற்ற வரிமுறை என விமர்சித்து அமெரிக்கப் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்கும் போக்கை கனடா போன்ற நாடுகள் ஊக்குவிக்கின்றன.