உலகம்

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்

rajakannan

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை உடனடியாக தொடங்க இந்தியா விரும்புவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்காவில் தயாராகும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதை ட்ரம்ப் விமர்சித்து வந்தார். 

இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதக்கப்படுவதை தவிர்க்கவே இந்தியா இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.