அகதிகளை ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டுள்ள தடை சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான புதிய உத்தரவுகளில் கையெழுத்திட்ட பின் பேசிய அவர், இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்டவைகளில் உறுதியாக இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்காவின் ஜான் கென்னடி விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக உள்ளது என கண்டித்துள்ளது.
இது தொடர்பாக சரியான சட்ட மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருட்யூ, உள்ளிட்டோரும் ட்ரம்பின் இந்த நடவடிக்கையில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளனர்.