உலகம்

ட்ரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு? வெளியான தகவல்

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு இருப்பதாகவும், அங்கு அவர் வரி கட்டிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கணக்கில் சீனாவுக்கு ட்ரம்ப் வரி செலுத்திவருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் சீனாவுடனான வர்த்தகத்தை துண்டித்ததுடன், சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சீனாவில் அதிபர் ட்ரம்ப் வர்த்தகம் செய்து வருவதாகவும், அங்கு வங்கிக்கணக்கு வைத்திருப்பதை அவரே ஒப்புக்கொண்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு சொந்தமான தொழில் நிறுவனம் சீனாவில் இருப்பதாகவும், இதற்கான ஆதாரம் அவரது மகன் ஹண்டர் பைடனின் மெயிலிலிருந்து பெறப்பட்டதாகவும் ட்ரம்பின் வழக்கறிஞர் ருடி குற்றஞ்சாட்டியுள்ளார்.