Trump Reuters
உலகம்

ட்ரம்பின் அடுத்த மெகா மூவ்.. முக்கியப் புள்ளியுடன் சந்திப்பு? நடக்கப்போவது என்ன?

அதிபர் ட்ரம்ப் வடகொரியாவுடன் சமீப நாட்களில் இணக்கமான போக்கை விரும்புவதாக அவரது நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனை வலுப்படுத்தும்படி தற்போது உலக அரங்கில் ஒரு தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் நேரில் சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் தனது அடுத்த ஆசியப் பயணத்தின்போது கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அதாவது APEC மாநாட்டையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trump

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், ட்ரம்பின் அழைப்புக்கு கிம் ஜாங் உன் தரப்பில் இதுவரை உறுதியான பதில் கிடைத்ததாகத் தெரியவில்லை. வட கொரியா தற்போது பேச்சுவார்த்தைக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஏறகெனவே 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்புகள் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் சேர்த்தன.

kim jong un

இந்நிலையில், அமெரிக்கா–தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதும், வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க அவர் முயற்சிப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், நவம்பர் சந்திப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்படத்தக்கது.