கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீதான தடைகள் போதுமான அளவு அமல்படுத்தப்படவில்லை என்று காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா இன்று முதல் 10% மற்றும் 12.5% என்ற அளவில் புதிய வரிகளை விதித்துள்ளது;
செய்தியாளர்; M.மீரா
அமெரிக்கா ஈரானுடன் மீண்டும் போரில் ஈடுபட்டுள்ளதால், வளைகுடாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10% மற்றும் 12.5% என்ற அளவில் புதிய வரிகளை விதித்துள்ளார். இந்த வரிகள், உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், அதனுடன் சேர்த்து 17 நாடுகளுக்கு வரி விதித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம், பிரிவு 301-இன் கீழ் இந்த முடிவை எடுத்துள்ளது.
கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்தியா குறைந்தபட்ச வரி விதிப்பான 10 சதவீதம் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இருந்து கட்டாய உழைப்பு முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு மேற்கொள்ளபட்டதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, அர்ஜென்டினா, கம்போடியா, கனடா, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா 10 சதவீத வரி விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள் மீது 12.5 சதவீத வரியையும் விதித்துள்ளது. அமெரிக்காவின் புதிய சுங்க வரிகள் ஜூலை 24-ஆம் தேதி முதல், அதாவது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.