உலகம்

வெளிநாட்டு தூதர்கள் பதவி விலக ட்ரம்ப் உத்தரவு

வெளிநாட்டு தூதர்கள் பதவி விலக ட்ரம்ப் உத்தரவு

webteam

அமெரிக்காவில் ஒபாமா அரசால் அரசியல்ரீதியாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுத் தூதர்கள் வருகிற 20ஆம் தேதிக்குள் பதவி விலக புதிய அதிபராகவுள்ள டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை ‌சார்பில் கடந்த 23ம் தேதி வெளிநாட்டுத் தூதர்களுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சி மாற்றங்களின்போது தூதர்களின் பள்ளிக் குழந்தைகள், மனைவியின் பணியிடம் ஆகியவற்றைக் கருதி சில மாதங்கள் வரை தூதர்கள் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது ட்ரம்ப் அதிபராக பதவியேற்கும் 20ஆம் தேதிக்கு முன்பே தூதர்கள் பதவி விலக உத்தரவிடப்பட்டுள்ளது.