அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மூன்று மாத சம்பளத்தை கல்வித் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை, சமூக பணிகளுக்கு வழங்குவேன் உறுதி அளித்தார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற பின் ஜன - மார்ச் வரையிலான சம்பளத்தை மருத்துவ ஆராய்ச்சி பணிகளுக்காக நன்கொடையாக வழங்கினார்.
இந்நிலையில், அவர், தனது ஏப் - ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித் துறைக்குக் கொடுத்துள்ளார். மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அமெரிக்காவில் கல்விச் சீர்திருத்தம் கொண்டு வருவதே ட்ரம்ப் அரசின் கொள்கை எனவும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.