அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் மூன்று மாத சம்பளத்தை அந்நாட்டு தேசிய பூங்காவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் சம்பளத் தொகையை சமூக நலனுக்கு செலவழிக்கப்போவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள தேசிய பூங்காவின் உள் கட்டமைப்பு சீரமைப்புக்காக தமது முதல் மூன்று மாத சம்பள தொகையான சுமார் 50 லட்சம் ரூபாயை காசோலையாக ட்ரம்ப் வழங்கியுள்ளார். இதனை அவரது செய்தித்தொடர்பாளர் சியான் உறுதிப்படுத்தியுள்ளார்.