அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிகாலத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
காரணம், மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கமாகவும், வருகின்ற 2035 ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக பதிவியேற்றிருக்கும் ட்ரம்பிற்கோ காலநிலை மாற்றம், சுற்றுசூழல் பாதிப்பு போன்றவற்றின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
அதுமட்டுமல்ல, கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் குறித்தான இந்த தடையை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தவகையில், தான் பதவி ஏற்ற சில காலங்களிலேயே அதிரடியான நடவடிக்கைளை செய்து வரும் அதிபர் டிரம்ப், பிளாஸ்டி ஸ்ட்ரா குறித்தும் விவகாரமான உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தன் சமூக வலைதளமான ட்ரூத்தில் பதிவிட்டுள்ள அவர், ” பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டாம், காகித ஸ்ட்ராக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்” என்ற ஜோபைடனின் ஆணை முடிந்துவிட்டது!. எனவே, உங்களது அடுத்த குளிர்பானத்தை, அருவருப்பானவகையில் நாவில் கரையும் காகித ஸ்ட்ராக்கள் இல்லாமல், அனுபவியுங்கள். ” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ” பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டுமென்ற பைடனின் விசித்திரமான உத்தரவை, அடுத்த வாரத்துடன் ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்திட உள்ளேன்; எனவே, பிளாஸ்டிக்கிற்கு திரும்புவோம் ” என பதிவிட்டுள்ளார்.