வெள்ளை மாளிகையில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்று இரு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ததுபோல, கடந்த ஆண்டு அவர் மன்னித்த இரு வான்கோழிகளை தாம் கொல்லும்படி உத்தரவிட மாட்டேன் என நகைச்சுவையாக பேசினார். ட்ரம்ப் மன்னித்த அந்த இரு வான்கோழிகளும் மிகவும் அதிர்ஷ்டமானவை என்றும், விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அந்த வான்கோழிகள் வளர்க்கப்படும் என்றும், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே நன்றி தெரிவிக்கும் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஃபுளோரிடாவின் உள்ள கடற்கரைக்கு செல்லப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.