உலகம்

ரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்ப் சதியில் ஈடுபடவில்லை !

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலின் போ‌து ரஷ்யாவுடன் இணைந்து, டொனால்ட் ட்ரம்ப் சதி செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை என அறிக்கை வெளி‌யிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டு எழு‌ந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவ‌ற்காக 2017ஆம் ஆண்டு எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் அறிக்கையை முல்லர் நேற்று அளித்தார். 

இந்த அறிக்கையை அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் ராபர்ட் பார் வெளியிட்டார். அ‌தில், ட்ரம்ப் ரஷ்யாவோடு இணைந்து ஜனாதிபதி தேர்தலில் சதி செய்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப் குற்ற செயலில் ஈடுபட்டார் என்றும் அல்லது அவரை குற்றமற்றவர் எனவும் கூற முடியாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் ட்ரம்ப் மீதான மற்ற விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லரின் அறிக்கை வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், தன் மீதான குற்றமில்லை என தெளிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார். இதனிடையே ஜனநாயக கட்சியினர் முல்லர் விசாரணையின் முழு அறிக்கையையும் பொதுமக்களுக்கு வெளியிடவேண்டும். மேலும் இந்த விசாரணையின் பொது சேகரிக்கப்பட்ட ஆதராங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.