அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது தொலைதொடர்பு குழுவின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கரான ராஜ் ஷாவை நியமித்துள்ளார்.
இந்தியரான ராஜ் ஷா ட்ரம்பின் துணை உதவியாளராகவும், முதன்மை துணை செய்தி தொடர்பாளராகவும் இனி பணியாற்றுவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ஷா அதிபரின் தொலைதொடர்பு குழு துணை இயக்குநர் பொறுப்பில் இருந்தார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் ஷாவின் பெற்றோர் 1980களில் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்துக்கு புலம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.