உலகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க ட்ரம்ப் புதிய திட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க ட்ரம்ப் புதிய திட்டம்

webteam

அமெரிக்காவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டத்தை அதிபர் ட்ரம்ப் நாளை தொடங்கவுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதையடுத்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளார். இந்த தகவலை அமெரிக்க சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி ஸ்காட் ப்ரூட் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலக்கரித் துறை தொடர்பான வேலை வாய்ப்புகள் பெருகும் என ஸ்காட் ப்ரூட் தெரிவித்துள்ளார். ‌அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதியில் இது நிறைவேற்‌‌றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.