டொமினிகா நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பதிலாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் படத்தை பிரசுரித்தது.
எல் நேஷியானால் என்ற அந்த பத்திரிக்கை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு செயல்படுவதாக செய்தி வெளியிட்டது. இந்தசெய்தியில் இஸ்ரேல் பிரதமருடன், ட்ரம்ப் படம் என நினைத்து அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான அலெக் பால்ட்வின் படத்தை தவறாக பிரசுரித்தது. சாட்டர்டே நைட்ஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அலெக் பால்ட்வின், ட்ரம்ப் போன்ற தோற்றம் கொண்டதால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக வாசகர்களிடம் அந்த பத்திரிகை சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.