உலகம்

மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்: உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடக்கம்

மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்: உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடக்கம்

JustinDurai
ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியதால், 3 வாரங்களுக்கு முன் காபூல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் அமெரிக்கப் படை உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேறின.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் விமான சேவையைத் தொடங்க கத்தார் தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை தலிபான்கள் நாடியிருந்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது. காபூல் மற்றும் 3 முக்கிய நகரங்கள் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன.