உலகம்

ஜேசிபியை இயக்கியது செல்ல நாய்: உரிமையாளர் பலி

ஜேசிபியை இயக்கியது செல்ல நாய்: உரிமையாளர் பலி

Rasus

இங்கிலாந்தில் கோடீஸ்வரர் ஒருவரின் மரணத்திற்கு அவர் வளர்த்து வந்த செல்ல நாயே காரணமாக அமைந்த கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் டெரக் மீட். வயது 70. உள்ளூர் கவுன்சிலர். இவரது பண்ணை நிலத்தில் கனரக பொருட்களை ஏற்றி இறக்க ஜேசிபி இயந்திரம் ஒன்று இருந்திருக்கிறது. இந்த வாகனத்தில் ஏதேச்சையாக ஏறிய டெரக் மீட்டின் செல்ல நாய், தெரியாமல் கீயரை இயக்கியுள்ளது. இதனால் வண்டி முன்நோக்கி வேகமாக நகர, பண்ணை நிலத்தில் நின்றிருந்த டெரக் மீட் மீது வேகமாக ஜேசிபி மோதியது. இதனால் அவர் உடல் நசுங்கியதுடன் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மரணம் அடைந்தார். டெரக் மீட்டின் செல்ல நாயே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.