மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம் freepik
உலகம்

சீனா: பெண்ணின் கண்களில் இருந்து எடுக்கப்பட்ட 60 புழுக்கள்.. பாதிப்பு ஏற்பட்டது எதனால்?

Prakash J

சீனாவைச் சேர்ந்த மிரர் என்ற பெண் ஒருவருக்கு, அவருடைய கண்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அரிப்பைப் போக்கும்வகையில், தன்னுடையக் கைகளைக் கொண்டு கண்களை தேய்த்துள்ளார். அப்போது அவருடைய கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மிரர், உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கண்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இதில், அவரது இரு கருவிழிகளிலும் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரது வலது கண்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட புழுக்களையும், இடது கண்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இறுதியில் 60-க்கும் மேற்பட்ட புழுக்களை அவரது கண்களில் இருந்து நீக்கியதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகை ஒட்டுண்ணிகள்மூலம் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து அவரை, மருத்துவப் பரிசோதனைக்கு வரும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

model image

ஆயினும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மிரர், “இப்புழுக்கள் தாம் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளிடமிருந்து பரவியிருக்கலாம். அவற்றைத் தொட்டுவிட்டு, கை கழுவாமல் கண்களில் கை வைத்திருப்பதால் இந்த தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எம்.பி. பதவி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய மஹுவா மொய்த்ரா