வருங்காலங்களில் கார்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி வருகின்றனர். இதில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, கார்களில் பயன்படும் பெட்ரோலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு பீரை தயாரிக்கும் செயலில் சில மாற்றங்களை மாற்றி நிகழ்த்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி எத்தனாலாக இருக்கும் ஆல்ஹகாலிக்கை பியூட்டனலாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த அறிஞர்களின் இந்த கண்டிப்பிடிப்பு தற்போது அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. ஆனால், எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் இந்த வினை செயல் அதிக காலம் எடுத்துக்கொள்வதால் தற்போது இந்த கண்டுப்பிடிப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை குறைக்கும் வகையில் பீரை பயன்படுத்தும் இந்த முறை களத்தில் இறங்குவது உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.