உலகம்

“கழுவிட்டு வந்தேன்னா நிலா மாதிரி முகம் ஜொலிக்கும்” - டிக்டாக் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்

EllusamyKarthik

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் லாரன் ரென்னி. டிக்டாக் பிரபலம். இவருக்கென தனியே ரசிகர் கூட்டமும் உள்ளது. சுமார் 17000 பேர் அவரை டிக்டாக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர். முகம் முழுவதும் முகப்பருக்களினால் அவதிப்பட்டு வந்த அவர் யூடியூபில் ‘Do It Yourself’ மோடில் ‘நமக்கு நாமே’ பாணியில் அதனை போக்குவதற்கான எளிய வீட்டுக்குறிப்புகளை தேடியுள்ளார். அப்போது அவர் கண்ணில் பட்டதுதான் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க். இந்தியாவில் காலம் காலமாக மருத்துவ குணம் மிக்க மஞ்சள் சமையல் மற்றும் சரும நலன் காக்கும் விஷயமாக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த வீடியோவில் சொன்னபடி மஞ்சளை கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயாரித்த அவர் அதை போட்டுக்கொண்டுள்ளார். அதோடு “கழுவிட்டு வந்தேன்னா நிலா மாதிரி என் முகம் ஜொலிக்கும்” என சொல்லி போஸ்ட் ஒன்றையும் லாரன் ரென்னி பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த மாஸ்க்கை எவ்வளவு நேரம் போட்டிருக்க வேண்டும் என்பதை அவர் அறியாமல் இதை செய்திருந்தார் என தெரிகிறது. சில மணிக்கு பிறகு அந்த மாஸ்க்கை எடுத்த போது தான் அவருக்கு அந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்துள்ளது. சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்திய போதும் அது போகவில்லை என தெரிகிறது. 

‘சுமார் மூன்று வார காலம் முகம் மஞ்சள் நிறத்தில் இருந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.