அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மகளுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மகள் இவாங்கா டிரம்ப் உடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடினார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் குத்து விளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அவருடன் இவாங்கா ட்ரம்ப் மற்றும் இந்திய அமெரிக்கர்களான நிக்கில் ஹாலே, சீமா வர்மாவும் உடனிருந்தனர். அதன் பின்பு பேசிய ட்ரம்ப், இந்துக்கள் கொண்டாடும் தீப ஒளித் திருநாளை இந்திய சமுதாயத்தினரோடு சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை கெளரமாக உணர்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியர்கள்தான் உலகின் மிகப் பெரிய பழமையான ஜனநாயகத்தை கட்டியமைத்தவர்கள். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களை நினைவுகூற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவாங்கா டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.