உலகம்

மொபைல் போன் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் - இறுதியில் நிகழ்ந்த ட்விஸ்ட்!

கலிலுல்லா

தொலைபேசியை பார்த்துக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் துளை இருப்பதை அறியாமல் கீழ்தளத்தில் விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நம் கவனத்தை மொபைல் போன்கள் சிதறடித்து, பல்வேறு ஆபத்துகளுக்கு ஈட்டு செல்வதை மறுக்க முடியாது. நம்மில் பலருக்கு சொந்த அனுபவங்கள் கூட இருக்கலாம். அந்தவகையில் துருக்கியில் நடந்த சம்பவம் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தொலைபேசியை பார்த்துக்கொண்டே நடந்து செல்லும் ஒரு இளைஞன் திறந்துகிடந்த துளையின் வழியாக கீழே விழுந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இளைஞர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் கீழேவிழுந்ததும், கீழ்தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பாக்ஸ்களில் விழுந்ததால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அந்த இளைஞர் அப்துல்லா மட் பேசுகையில், "நான் அதைப் பார்க்கவில்லை, நான் கீழே விழுந்தேன். தற்செயலாக, நான் பெட்டிகளின் அடுக்கில் இறங்கினேன். அன்று பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் நான் எனது அலுவலகத்திற்குச் சென்றேன்'' என்றார்.