google warned people before quake  AI - PT
உலகம்

நிலநடுக்கம் குறித்து எச்சரித்த Android ஃபோன்கள்..? வெனிசுலாவில் என்ன நடந்தது?

கூகுளின் ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு (Google's Android Earthquake Alerts System) ஆரம்பகட்ட நில அதிர்வுகளைக் கண்டறிந்து, அருகிலுள்ள பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியது.

PT WEB

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு சில நொடிகள் முன்பே அங்குள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்டுகள், கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள ஆக்சிலரோமீட்டர் சென்சார் மிக நுண்ணிய நில அதிர்வுகளையும் கண்டறிந்து, கூகுள் சர்வர்கள் மூலம் அருகிலுள்ள பயனர்களுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பியதை காட்டுகின்றன.

வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்பட சில நொடிகள் முன்னரே ஆண்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் எச்சரிக்கை வந்தததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிலர் ஸ்மார்ட்ஃபோன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை சமூகதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கூகுள் ஆண்டிராய்டு இயங்கு தளம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் ஆக்சிலரோமீட்டர் என்ற சென்சார் இருப்பதாகவும் திரையை கிடைமட்டமாகவும் நேராகவும் திருப்புவதற்கான இந்த சென்சாரே நிலத்தில் ஏற்படும் மிக நுண்ணிய அதிர்வுகளை கண்டறிந்து தெரிவிப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏதேனும் ஒரு ஸ்மார்ட்ஃபோன் அதிர்வை கண்டறிந்தாலும் கூகுள் சர்வர்கள் மற்ற ஸ்மார்ட்ஃபோன்களிலும் இது பதிவாகியுள்ளதா என கண்டறிந்து அதை உறுதிப்படுத்திய பின் குறிப்பிட்ட பகுதி பயனாளிகளுக்கு சில நொடிகளுக்குள் தகவல் அனுப்பிவிடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்