சாம்பார் வடை, மிக்ஸர், ஜூஸ் போன்ற உணவுப் பொருள்களை ஊழியர்களுக்கு வழங்குவதை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ நிறுத்த முடிவுசெய்துள்ளது.
டிஜிசிஏ ஊழியர்களின் அலுவலகக் கூட்டங்களில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நிதி பற்றாக்குறை காரணமாகவும் சாம்பார் வடை, சாண்ட்விச், ஜூஸ், மிக்ஸர், போஹா, மீத்தி தாகி போன்ற சிறப்பு உணவுப் பொருள்களை ஊழியர்களுக்கு வழங்குவதை நிறுத்துவதாக, டிஜிசிஏ முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக டீ, காபி, மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், உள்நாட்டில் சேவை வழங்கும் எகானமி கிளாஸ் விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தியது. அதுமட்டுமின்றி, சாலட் உள்ளிட்ட உணவுகள், சில மேகசின்கள் வழங்குவதையும் ஏர் இந்தியா நிறுத்தியது. செலவுகளை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்தது.