Nepal flood Reuters
உலகம்

நேபாளம் பேரிடர் போல்.. வரலாற்றில் 26ஆம் தேதிகளில் ஏற்பட்ட கொடூர இயற்கைச் சீற்றங்கள்!

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் பெருவெள்ளப் பேரழிவு நிகழ்ந்தது..

Rishan Vengai

நேபாளத்தில் ஆகஸ்ட் 26 பெருவெள்ளம் 900க்கும் மேற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில், 26ஆம் தேதி பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேரிடர் நாளாகவே பதிந்துள்ளது. இந்தோனேசியா சுனாமி, குஜராத் நிலநடுக்கம், மஹாராஷ்டிரா வெள்ளம், ஈரான் மற்றும் துருக்கி நிலநடுக்கங்கள், மும்பை பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் அணு உலை விபத்து போன்றவை அனைத்தும் 26ஆம் தேதியிலேயே நிகழ்ந்துள்ளன.

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் பெருவெள்ளப் பேரழிவு நிகழ்ந்துள்ளது. வரலாற்றில் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு மாதங்களின் 26ஆம் தேதியில் இதுபோன்ற பல இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளனர்.

  • 2006 - மே 26இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  • 2005 - ஜூலை 26இல் மஹாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 944 மில்லிமீட்டர் மழை கொட்டியதால் ஏற்பட்ட பாதிப்பில் 1,094 பேர் உயிரிழந்தனர்.

  • 2004 - டிசம்பர் 26இல் இந்தோனேசியாவின் சுமத்ரா கடற்பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானது. இதில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்தில் 2,28,000 பேர் மாண்டனர்.

  • 2003 - டிசம்பர் 26இல் ஈரானின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 31,000 பேர் மரணித்தனர்.

Nepal Rescue
  • 2002 - மார்ச் 26 அன்று வட ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 1,800 பேர் உயிரிழந்தனர்.

  • 2001 - ஜனவரி 26இல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,66,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  • 1963 - ஜூலை 26இல் அன்றைய யுகோஸ்லாவியாவின் ஸ்கோப்ஜே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,070 பேர் உயிரிழந்தனர்.

  • 1943 - நவம்பர் 26இல் துருக்கியின் லாடிக்- சம்சுன்-ஹவ்சா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4,020 பேர் உயிரிழந்தனர்.

  • 1939 - டிசம்பர் 26இல் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32,700 பேர் மரணமடைந்தனர்.

இவை தவிர வெவ்வேறு ஆண்டுகளில் 26ஆம் தேதிகளில் வேறு பல இயற்கைப் பேரழிவுகளிலும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். செயற்கைப் பேரழிவுகளும் 26ஆம் தேதிகளில் நடந்துள்ளன. 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியில்175 பேருக்கு மேல் உயிரிழந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று 31 பேர் உயிரிழந்த செர்னோபில் அணு உலை விபத்தும் நிகழ்ந்தன.