உலகம்

ரஷ்யா மீதான பொருளாதார தடை மசோதா - டிரம்பின் உத்தரவுக்காக அனுப்பி வைப்பு

ரஷ்யா மீதான பொருளாதார தடை மசோதா - டிரம்பின் உத்தரவுக்காக அனுப்பி வைப்பு

webteam

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைவிதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியதைத் தொடர்ந்து அம்மசோதா அதிபர் டிரம்பின் உத்தரவுக்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக, அமெரிக்‍க நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த மசோதா, பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இம்மசோதா வெற்றிபெற குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் தங்கள் ஒருங்கிணைந்த ஆதரவை வெளிப்படுத்தின. இந்நிலையில், இந்த மசோதா அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவைப் பெறுவதற்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்‍க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில், ரஷ்யா நேரடியாகத் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, அமெரிக்‍க புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.