உலகம்

சீனாவில் கடும் பனி மூட்டம்: விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் தவிப்பு

சீனாவில் கடும் பனி மூட்டம்: விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் தவிப்பு

webteam

சீனாவில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு‌ள்ளன.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் ‌எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கிறது. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் செங்குடூ நகரில் உள்ள ஷூவாங்லியூ‌ சர்வதேச விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. 45-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ‌ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்‌றனர்.