உலகம்

’கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை’- நடுவானில் நாடு திரும்பிய அமெரிக்க விமானம்

’கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை’- நடுவானில் நாடு திரும்பிய அமெரிக்க விமானம்

நிவேதா ஜெகராஜா

ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அமெரிக்கா விமானம் நடுவானிலேயே திரும்பி சென்றுள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டெல்டா நிறுவனத்தின் விமானம், சியாட்டில் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரம் நோக்கி புறப்பட்டது. ஆனால் திடீரென அந்த விமானம் நடுவானிலேயே திரும்பி அமெரிக்காவிற்கே வந்தது. ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததே விமானத்தை தரையிறக்காததற்கு காரணம் என டெல்டா நிறுவனம் கூறியுள்ளது. இவ்விவகாரம் இரு நாட்டுக்கிடையிலான முரண்களோடும் ஒப்பிட்டு பார்க்கப்படுவதால் அரசியல் ரீதியாகவும் இது நாடு முழுவதும் விவாதங்களை பெற்றுவருகிறது.