உலகின் மிகவும் அடக்குமுறை அரசாங்களில் ஒன்றாக வடகொரியா அரசாங்கம் கருதப்படுகிறது. கிம்-ஜாங்-உன் 2011 ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக செயல்பட்டு வருகிறார். இந்த நாடு சர்வதேச வெளிச்சத்துக்கு வராத நிலையில், உலகிற்கு பெரும் மர்மங்கள் நிறைந்த தேசமாகவே இருந்து வருகிறது. சர்வாதிகாரம் நிறைந்த இந்த தேசத்தில், வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பது, கே.பாப் இசையைக் கேட்பது போன்ற செயல்பாடுகள் கடும் குற்றமாகவே கருதப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான காணொளியில் மூலம், தென்கொரியா நாடகங்களை பார்த்ததற்காக 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்தசூழலில் தான், தென்கொரிய நாட்டின் சியோலைத் தலைமையிடாமகக் கொண்ட மாற்றுக்கால நீதிச் செயல்பாட்டுக் குழு (TJWG) என்னும் அமைப்பு கோவிட் தொற்றுக் காலத்தில் வடகொரியாவில் வழக்கத்தைவிட அதிகளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020 ஆண்டு கோவிட் பரவல் அதிகரித்திருந்த நிலையில், வடகொரியா தனது எல்லையை முற்றிலுமாக மூடியது. இந்த எல்லை மூடல், 2024 ஆண்டு வரை தொடர்ந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவிலான மரண தண்டனைகளை வடகொரியா செயல்படுத்தியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அந்த காலக்கட்டத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம் எனத் தெரிவித்திருக்கிறது.
2020 முதல் 2024 வரை மதம், மூடநம்பிக்கை மற்றும் கே-டிராமாக்கள், கே-பாப் போன்றவற்றை நுகர்வது உள்ளிட்ட குற்றங்களுக்காக 153 தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 44 மட்டுமே எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், கிம்மின் உத்தரவுகளை மீறியதற்காகவோ அல்லது தலைவரையோ, ஆளும் தொழிலாளர் கட்சியையோ அல்லது பாதுகாப்பு சேவைகளையோ விமர்சித்ததற்காகவோ நிகழ்த்தப்படும் அரசியல் மரணதண்டனைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது.
வடகொரியா அரசு திட்டமிட்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக நடந்த ஐநா சபையின் விசாரணையின் காரணமாக 2015 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மரண தண்டனைகள் குறைவாகவே இருந்த நிலையில், கோவிட் காலத்தில் உலகம் முடங்கியதை வடகொரியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
வடகொரியாவின் இந்த மரண தண்டனைகள், பரம்பரை ஆட்சி முறையையும், கலாச்சார மற்றும் சித்தாந்தக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக கருத்தப்படுகின்றன என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், 2021 முதல் 2024 வரையிலான ஆட்சிக் காலக்கட்டத்தில் 358 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கின்றனர் எனவும்