டென்மார்க்கில் மண் அரிப்பால் கடலில் விழவிருந்த கலங்கரை விளக்கத்தை அப்படியே நகர்த்திச்சென்று பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
டென்மார்க்கின் வடக்கு ஜட்லேண்ட் என்ற பகுதியில் இருந்த 120 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் மண் அரிப்பால் மெல்ல, சாய்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.