உயரமான சைக்கிளில் ஏறி கின்னஸ் சாதனைக்கு முயன்றவரின் முயற்சிக்கு கியூபா போலீசார் தடை விதித்தனர்.
கியூபா நாட்டைச் சேர்ந்தவர் ஃபெலிக்ஸ் குய்ரோலா. இவர், உயரமான சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்தார். அந்த சைக்கிள் 24 புள்ளி, ஆறு அடி உயரம் கொண்டது. ஹவானா என்ற இடத்தில் மக்களின் முன்பு அந்த சைக்கிளில் ஏறி மிதித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே பாதியில் இறக்கிவிடப்பட்டார். இந்த சாதனை நிகழ்த்துவதற்கு ஃபெலிக்ஸ் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி போலீசார் தடை வித்தனர். இதனால் ஃபெலிக்ஸ் தனது சாதனைக் கனவை நிறைவேற்ற முடியாமல் போனது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இதுவரை 20 அடி உயரம் கொண்ட சைக்கிள் பயணமே சாதனையாக இருக்கிறது.