உலகம்

பயிற்சியாளரின் தலையைக் கவ்விய முதலை..வைரலாகும் வீடியோ

webteam

தாய்லாந்து நாட்டில் பயிற்சியாளரின் தலையை முதலை ஒன்று கடித்து குதற முயன்ற காட்சி அடங்கிய வீடியோ காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தாய்லாந்தின் புகழ்பெற்ற முதலை கண்காட்சியில் பயிற்சியாளரின் தலையை பிடித்து முதலை அசுர வேகத்தில் கடித்துக் குதற முயன்றது. இதனால் நிலைகுலைந்துப் போன பயிற்சியாளர் எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் தரையிலேயே சாய்ந்தபடி வலியால் துடித்தார். இதனைக்கண்ட சுற்றுலாவாசிகள் அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இச்சம்பவம் நேற்று நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. முதலைக் கண்காட்சியில் பயிற்சியாளர்கள் முதலையை வைத்து பல்வேறு சாதனைகளை செய்வது வழக்கம். இவ்வாறு சுற்றுலாவாசிகளை கவர்வதற்காக முதலையின் வாயில் தலையை வைத்து சாகசத்தில் ஈடுபட முயன்ற பயிற்சியாளரை திடீரென முதலை கடித்துக் குதற முயற்சித்திருக்கிறது.