ரஷ்யாவுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து, அவரது பரப்புரைக் குழுவிடம் செனட் குழு விசாரணை நடத்த இருக்கிறது.
ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், மருமகன் ஜேரட் குஷ்னர், பரப்புரைக் குழுத் தலைவர் பால் மேனஃபோர்ட் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் ஹிலரி கிளிண்டனைத் தோற்கடிப்பதறாக ரஷ்ய இடைத்தரகர்களிடம் பேச்சு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவரை இவர்கள் சந்தித்துப் பேசியது அண்மையில் அம்பலமானது. இந்த விவகாரத்தில் செனட் குழு தவிர, எஃப்பிஐ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.