உலகம்

அமெரிக்கா: ஏர் இந்தியா விமானத்தில் இருந்த சூட்கேஸில் மாட்டுச் சாண வரட்டி

அமெரிக்கா: ஏர் இந்தியா விமானத்தில் இருந்த சூட்கேஸில் மாட்டுச் சாண வரட்டி

EllusamyKarthik

அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில், அண்மையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற சூட்கேஸை சோதனையிட்டபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த சோதனையை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். 

உலகின் சில பகுதிகளில் மாட்டுச் சாணம் சமையல் எரிவாயு, எருவாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இருப்பினும் இந்தியாவிலிருந்து மாட்டுச் சாண வரட்டியை அமெரிக்காவுக்கு கொண்டு வர அமெரிக்கா தடை விதித்துள்ளது. கால்நடைகள் மத்தியில் காணப்படும் கோமாரி நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா கடந்த 1929 முதல் கோமாரி நோய் இல்லாத பிரதேசமாக திகழ்ந்து வருகிறது. அதனால் அந்த சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட மாட்டுச் சாண வரட்டியை அதிகாரிகள் அழித்து அப்புறப்படுத்தினர்.