இரட்டை தலை உடைய அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிரேசிலில் பிறந்தது.
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த 18ஆம் தேதி ஒரு கன்று குட்டி பிறந்தது. அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்றுகுட்டி இரண்டு வாய், இரண்டு முக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து இரட்டை தலையுடன் பிறந்த பசுங்கன்றை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பார்த்து சென்றனர்.
இதுபோன்று இரட்டை தலையுடன் பிறப்பதற்கு மரபணு மாற்றமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் அது நீண்ட நாள்கள் உயிருடன் இருப்பது கடினம். இந்நிலையில் பிறந்த 4 நாட்களில் இரண்டு தலையுடன் பிறந்த கன்று இறந்தது. கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வதற்குள் கன்று இறந்துவிட்டதாக கால்நடை வளர்ப்பாளர் எலிடன் கூறினார்.
இதையும் படிக்க: செவ்வாய் கிரகத்தின் இரு துணைக் கோள்களின் துல்லியமான படங்களை வெளியிட்ட சீனா!