உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கோமா நிலையிலிருந்து எழுந்தார் அந்த பெண்.
அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர். எனினும் கடைசி முயற்சியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் (Induced Coma) வைக்கப்பட்டார்.
ஆனால் 6 வாரங்களாக உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியாததால் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளை அகற்றிவிட டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் நல்வாய்ப்பாக, லைஃப் சப்போர்ட் அகற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அந்த பெண் கோமா நிலையிலிருந்து எழுந்தார். இதனைக்கண்டு மருத்துவக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதுடன், உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.