உலகம்

மக்களை உற்சாகமூட்டும் விதமாக விவசாயி ஒருவரின் "COVID go away" முயற்சி!

webteam

விவசாயி ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் "COVID go away"என பிரமாண்டமான எழுத்துக்களை உருவாக்கி உள்ளார்.

2020ம் ஆண்டையே கொரோனா என்ற வார்த்தை ஆக்கிரமித்து விட்டது என்று சொல்லலாம். 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா, ஊரடங்கு, இபாஸ், பாசிட்டிவ், நெகட்டிவ் என மக்களின் இயல்புவாழ்க்கையே மாறிவிட்டது. பள்ளிகள் எல்லாம் இப்போது ஆன்லைன் கிளாஸாக மாறிவிட்டன. ரயில், பேருந்து எல்லாம் நின்ற இடத்திலேயே நிற்கின்றன.வருடத்தின் பாதியை ஆக்கிரமித்துக் கொண்ட இந்த கொரோனா விரைவில் விலக வேண்டும்.

மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழக்கம்போல் தொடங்க வேண்டுமென்பதே அனைவரின் ஆவலாகவும் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய 13 ஏக்கர் விவசாய நிலம் மூலம் பொதுமக்களை உற்சாகமூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விவசாய தோட்டத்தில் உள்ள சோள சாகுபடியில் "COVID go away"என பிரமாண்டமான எழுத்துக்களை உருவாக்கி உள்ளார். அதாவது தோட்டத்தை ஏரியல் வியூவில் பார்த்தால் இந்த எழுத்துக்கள் தெரியும். அதற்கு ஏற்ப தன்னுடைய சாகுபடியை எழுத்துக்களாக வெட்டி எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 13 ஏக்கரும் இணைவது போல பல கோடுகள் போலவும் சாகுபடி வெட்டப்பட்டு டிசைனாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள விவசாயி ஜெரால்ட் ஜான்சன், மக்கள் கொரோனாவால் சோர்வடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தவே இந்த முயற்சி என தெரிவித்துள்ளார். இந்த இடத்தை பார்க்க அப்பகுதி மக்கள் வருகை தரும்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது