உலகம்

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

webteam

விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிபர் டிரம்பின் உத்தரவு எதிரொலியாக, சிரியா‌ ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் சிறை பிடிக்கப்பட்டனர். அதனை எதிர்த்து, வெள்ளை மாளிகை முன்பும், நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் உத்தரவுக்கு எதிராக, நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் சிறை பிடிக்கப்பட்ட 2 ஈராக்கியர் சார்பில், நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் அமெரிக்க சிவில் உரிமை யூனியன் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆன் டோனெலி, டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக இடைக்கால தடை விதித்தார். பயணிகளை அவர்களது தாய்நாட்டுக்கு அனுப்புவது கூடுதலான, சீர் செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும் என நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.