உலகம்

எச்1பி விசா வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்கநீதிமன்றம் தீர்ப்பு: இந்தியர்கள் அதிர்ச்சி

sharpana

எச் 1 பி விசாவிற்கு தடைவிதித்த ட்ரம்பின் உத்தரவை நீக்கக்கோரிய இந்தியர்களின் வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமைப் பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினர்கள் ஹெச் 1 பி விசா மற்றும் எச் 4 விசாக்களைப் பெற்று தங்கி வருகின்றனர். இந்த விசாவை 60 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், கொரோனாவால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் எச் 1 பி விசாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை செய்தார். ஏனென்றால், அமெரிக்கர்களுக்கே வேலை இல்லாமல் இருக்கும்போது மற்ற நாட்டினருக்கு எப்படி கொடுப்பது என்றும் கேட்டிருந்தார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ட்ரம்பின் இந்தக் கொள்கை ’வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும்’ என்று எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 169 இந்தியர்கள் அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் எச் 1 பி விசாவை வழங்க மறுக்கும் ட்ரம்ப் உத்தரவுக்கு தடைக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது ட்ரம்ப் உத்தரவுக்கு தடை போட நீதிமன்றம் மறுத்துவிட்டதால், வழக்குத் தொடர்ந்த இந்தியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்