உலகம்

தம்பதியரின் விருந்தில் கலந்துகொண்ட புலி - விமர்சனத்துக்குள்ளான வீடியோ

JustinDurai
துபாயில் ஒரு தம்பதி கொடுத்த விருந்தில் புலி ஒன்றும் கலந்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில வெளிநாடுகளில் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழாவாக ஏற்பாடு செய்து அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் துபாயில் வசிக்கும் ஒரு தம்பதியர், பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக ஹோட்டல் ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஹோட்டலில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்புப் புலி ஒன்று விருந்தினர் ஏற்பாடு செய்திருந்த மிதக்கும் பலூனை தாவி உடைத்தது. அப்போது அதிலிருந்து வண்ணப்பொடி கொட்டியது.
பலூனில் இருந்து வெளிவந்த இளஞ்சிவப்பு பொடி, தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. இந்த வீடியோ காட்டுயிர் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பிய நிலையில், 'புலிக்கு எந்த பாதிப்பும் இல்லை' என விழாக்குழுவினர் விளக்கம் தெரிவித்தனர்.