model image x page
உலகம்

உலக நாடுகள் | அரசு ஊழியர்கள் பட்டியல்.. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா! இந்தியா எந்த இடத்தில்?

அரசு துறைகளில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறி, அவர்களைக் குறைக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிற நிலையில், உலக நாடுகளில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

ilo

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (World Labour Organisation) புள்ளிவிவரத்தின்படி மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியாவில் 1,000 மக்களுக்கு 143 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்நாட்டின் மொத்த ஊழியர்களில் 29 சதவீதம் பேர் அரசு ஊழியர்கள். இரண்டாம் இடத்தில் இஸ்ரேல் உள்ளது. அங்கு 1,000 பேருக்கு 130 அரசு ஊழியர்கள் உள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பிரிட்டனில் 1,000 பேருக்கு 115 அரசு ஊழியர்களும் உள்ளனர்.

பிரான்ஸில் 1,000 பேருக்கு 82 ஊழியர்களும், அமெரிக்காவில் 64 ஊழியர்களும் உள்ளனர். மிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகளான சீனாவில் 1,000 மக்களுக்கு 34 ஊழியர்களும் இந்தியாவில் 21 அரசு ஊழியர்களுமே உள்ளனர். மிகக் குறைந்த அரசு ஊழியர்களைக் கொண்ட நாடுகளாக நைஜர், நைஜீரியா உள்ளன. நைஜரில் 1,000 மக்களுக்கு வெறும் 7 அரசு ஊழியர்களும் , நைஜீரியாவில் 10 அரசு ஊழியர்களுமே உள்ளனர்.