கொரோனாவால் உலக நாடுகள் பலவும் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றன.
கொரோனா முதல் அலை வேகமாக பரவத் தொடங்கிய காலத்தில், பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தின. இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் படி தென் ஆப்பிரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 28.5% ஆக இருந்தது. ஆனால் கத்தார், கம்போடியா, பஹ்ரைன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே வேலைவாய்ப்பின்மை இருந்தது.