உலகம்

“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி

“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி

webteam

இந்தியாவில் ஊழல்வாதிகள் தப்பிமுடியாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாடினார். புதிய பாரதத்தை உருவாக்கியது கர்வமாக உள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் இந்தியாவில் ஊழலுக்கு இடமே இல்லை என்றும் ஊழல்வாதிகள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். அத்துடன் இந்தியாவில் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.