உலகம்

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் - இந்தியாவின் நிலை?

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் - இந்தியாவின் நிலை?

webteam

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,06,226ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,88,020 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,47,872 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23, 65,703 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,74,445 ஆக உள்ளது.

உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,06,226ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் என்ணிக்கை 4,64,670 ஆக உள்ளது.

அதற்கு அடுத்து பிரேசிலில் 3,76,669 பாதிப்பு; 23,522 இறப்பு, ரஷ்யா 3,53,427 பாதிப்பு; 3,633 இறப்பு, ஸ்பெயின் 2,82,480 பாதிப்பு; 26,837 இறப்பு, லண்டன் 2,61,184 பாதிப்பு; 36,914 இறப்பு, இத்தாலி 2,30, 158 பாதிப்பு; 32,877 இறப்பு, பிரான்ஸ் 1,82,942 பாதிப்பு; 28,432 இறப்பு, ஜெர்மனி 1,80,789 பாதிப்பு; 8,428 இறப்பு, துருக்கி 1,57,814 பாதிப்பு; 4,369 இறப்பு என உள்ளது.

இந்தியாவை பொருத்தவரை, 1,44,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,172 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 60,706 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 80,072 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.