உலகம்

ட்ரம்ப் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒபாமா..!

ட்ரம்ப் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒபாமா..!

webteam

அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

சீனாவில் தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 80 ஆயித்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை சீனா பரப்பிவிட்டதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில், அதிபர் ட்ரம்பின் நிர்வாகத் திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா இந்த பேரழிவைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய ட்ரம்ப் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா இன்று பேரிழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா
பாதிப்படைந்து உள்ளது. உலக நாடுகள் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கின்றன என்பதை மறந்து ஒரு அரசு செயல்படுகிறது. இந்த நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றது என நினைக்கிறேன். அதனால் ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கொரோனா விவகாரம் அமெரிக்க தேர்தலில் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.