உலகம்

ஒரு வாரத்தில் கொரனா பல மடங்கு அதிகரிக்கக் கூடும் - சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஒரு வாரத்தில் கொரனா பல மடங்கு அதிகரிக்கக் கூடும் - சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை

webteam

கொரனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே கொரனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரனா வைரஸ் சீனாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 20 நகரங்களை சேர்ந்த மக்கள் முடக்கப்பட்டுள்ளதால் இது நாட்டின் பொருளாதாரத்தையுமே பதம் பார்த்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என சீனாவை சேர்ந்த ஆய்வாளர்களே எச்சரிக்கின்றனர்.

ஹாங்காங் - சீனா இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் முகக் கவசங்கள் வாங்குவதற்காக மக்கள் மருந்துக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தேவை அதிகரித்ததால் முகக்கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. எனினும் பதட்டமானமனநிலையில் இருக்கும் தங்களுக்கு விலை ஒரு பொருட்டல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்