உலகம்

கொரோனா தடுப்பூசி 94 சதவீதம் வெற்றி: அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா அறிவிப்பு

sharpana

கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்று அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் நிறுவனங்களில் ஒன்றான மாடர்னா அறிவித்துள்ளது 

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி கடந்த மார்ச் முதல் இந்தியாவையும் தாக்கியது. கொரோனா தொற்று பரவி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால், இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் சீரிய முயற்சியில் இருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நிறுவனங்களில் ஒன்றான மாடர்னா கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்து பார்த்ததில் 94 சதவீத பயன்பாடு கொடுத்ததைக் கண்டு மகிழ்ச்சியில் உள்ளனர், மாடர்னாவின் மருத்துவக் குழுவினர்.

 “இது எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. இந்தத் தடுப்பூசியை உருவாக்கி அதிக செயல்திறனுடன் அறிகுறி நோயைத் தடுக்கும் திறனைக் காண முடிந்தது ஆச்சர்யமாக இருந்தது” என்று மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டால்  ஜாக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாததால், தடுப்பூசிக்கான பாதுகாப்புகளைக் குவித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்க மார்டனா திட்டமிட்டுள்ளது.அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தங்களின் தடுப்பூசி 90 சதவீதம் பயனுள்ளதாகக் கூறியதை அடுத்து மாடர்னா நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.