அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்தை கடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, மசாசூசெட்ஸ், ஒரேகான், உடா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும் அமெரிக்க மருத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர்.